/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மது கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்
மது கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்
மது கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்
ADDED : செப் 01, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
பழநி, செப்.2-
‘‘தமிழகத்தில் மது கொள்கையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
பழநியில் அவர் கூறியதாவது:
கள் தடையை நிரந்தரமாக நீக்கினால் மட்டுமே பனை தொழில் மேம்பாடு அடையும். இந்த ஆண்டு எல் நினோவால் வறட்சி ஏற்பட்டதால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். காவிரியில் நீர் பங்கீடு தினந்தோறும் நடக்க வேண்டும். இதனால் பிரச்னைகள் குறையும். பீகார், குஜராத் மாநிலங்களில் பூரண மதுவிலக்கு உள்ள நிலையில் அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் மது கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்’’ என்றார்.
