ADDED : அக் 03, 2024 06:08 AM
நெய்க்காரப்பட்டி: பழநி தாலுகா பகுதிகளான பால சமுத்திரம் பெத்தநாயக்கன்பட்டி பகுதிகளில் காந்தி ஜெயந்தி நாளான நேற்று தடையை மீறி மது விற்றனர்.
இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு பாலசமுத்திரம் பகுதியில் துர்க்கையப்பன்42, கலிக்கநாயக்கன்பட்டி பகுதியில் மணிகண்டன் 40, மது விற்றதை கண்டறிந்து பழநி தாலுகா போலீசார் அவர்களை கைது செய்து 326 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆயக்குடி பகுதியில் மதுவிற்ற ஜான்பாலை43,ஆயக்குடி போலீசார் அவரை கைது செய்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வடமதுரை: வடமதுரை போலீசார் நேற்று ரோந்து சென்றபோது செங்குறிச்சி , ஆண்டிப்பட்டி பிரிவு, காணப்பாடி, பெரியகோட்டை உள்ளிட்ட டாஸ்மாக் பகுதிகளில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்ற நல்லுச்சாமி 24, வீரபத்திரன் 23, மோகன்குமார் 27 ஆகியோரை கைது செய்தனர்.
முருகானந்தம், கணேசன் தப்பியோடிவிட்டனர். 515 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

