ADDED : பிப் 19, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம், : -நத்தம் சேத்துார் பகுதியில் அனுமதி இன்றி மது விற்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் போலீசார் சேத்துார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோழிப்பண்ணை அருகே சேத்துாரை சேர்ந்த ஆறுமுகம் 63. முருகன் 41. ஆகியோர் மது விற்றனர். போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 54 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

