/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அனைத்து கட்சியினர் அமைதி ஊர்வலம்
/
அனைத்து கட்சியினர் அமைதி ஊர்வலம்
ADDED : டிச 28, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவையொட்டி திண்டுக்கல் மாநகர காங்.,சார்பில் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு காங்.,கட்சி அலுவலகத்திலிருந்து காமராஜர் சிலை வரை அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.
காங்.,மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார்,அ.தி.மு.க.,முன்னாள் மேயர் மருதராஜ்,மேயர் இளமதி,துணை மேயர் ராஜப்பா, மார்க்சிஸ்ட் மாவட்ட தலைவர் பிரபாகரன்,இந்திய கம்யூ.,மாவட்ட தலைவர் மணிகண்டன்,ம.தி.மு.க.,நகர செயலார் செல்வேந்திரன்,த.மு.மு.க.,மாவட் தலைவர் ஷேக்பரின்,எஸ்.டி.பி.ஐ.,மாவட்ட தலைவர் அபுதாகிர் ,வீரபாண்டி, சம்பத் பங்கேற்றனர். முடிவில் இரங்கல் கூட்டம் நடந்தது.