/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அனைத்து நலத்திட்டங்களும் தேடி வருகிறது: அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்

ADDED : ஜூலை 06, 2025 04:00 AM

ரெட்டியார்சத்திரம்: ''தி.மு.க., ஆட்சியில் அனைத்து நலத்திட்டங்களும் மக்களை தேடி வருகிறது'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
ரெட்டியார்சத்திரம் சில்வார்பட்டியில் நடந்த சமுதாய கட்டட பூமி பூஜையில் அவர் பேசியதாவது: கல்வி, மருத்துவம், உணவு பொருட்கள் உட்பட அனைத்து நலத்திட்டங்களும் மக்களை தேடி வருகிறது. பட்டத்துநாயக்கன்பட்டி பள்ளி மாணவர்களுக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட பஸ் வசதியை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு வேலை உறுதி திட்டத்திற்கான நிதியை நிறுத்தினாலும் தமிழகத்தில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 15ம் தேதி முதல் மனு கொடுத்த அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆர்.டி.ஓ., சக்திவேல் தலைமை வகித்தார். ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாச பெருமாள், பி.டி.ஓ., மலரவன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, ஊராட்சி முன்னாள் தலைவர் தனலட்சுமி ராமமூர்த்தி, ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.
-