/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைந்த அழுத்த மின்சாரத்தால் அவதி: மின் மாற்றியில் பொருள் மாயமாவதாக குற்றச்சாட்டு
/
குறைந்த அழுத்த மின்சாரத்தால் அவதி: மின் மாற்றியில் பொருள் மாயமாவதாக குற்றச்சாட்டு
குறைந்த அழுத்த மின்சாரத்தால் அவதி: மின் மாற்றியில் பொருள் மாயமாவதாக குற்றச்சாட்டு
குறைந்த அழுத்த மின்சாரத்தால் அவதி: மின் மாற்றியில் பொருள் மாயமாவதாக குற்றச்சாட்டு
ADDED : பிப் 21, 2025 06:33 AM

வத்தலக்குண்டு: ஜி.தும்மலப்பட்டி பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரத்தால் விவசாயிகள் அவதியடையும் நிலையில் மின் மாற்றி பொருட்களும் மாயமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜி.தும்மலப்பட்டி மஞ்சளாறு தடுப்பணையில் 200 ஏக்கரில் தென்னை, வாழை விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதி விவசாய கிணறுகளில் செயல்படும் 20க்கு மேற்பட்ட மோட்டார் பயன்பாட்டிற்கு குறைந்த அழுத்த மின்சாரம் கிடைப்பதால் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஊராட்சி ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு வந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் உயர் அழுத்த மின்மாற்றி அமைக்க மின் கம்பங்கள் ஊண்டப்பட்டு மின் மாற்றி உள்ளிட்ட அனைத்து சாதனங்களும் பொருத்தப்பட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட தடங்கல் காரணமாக மின் மாற்றிக்கு மின் இணைப்பு வழங்காமல் மின்வாரியத்தினர் அப்படியே விட்டு சென்று விட்டனர். தங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பலமுறை புகார் அளித்தும் மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது மூன்று ஆண்டுகளாக அமைக்கப்பட்ட மின்மாற்றியிலிருந்து பொருட்கள் ஒவ்வொன்றாக மாயமாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது வெறும் மின்கம்பம் மட்டுமே காட்சி பொருளாக உள்ளது. தங்கள் பகுதி மின்சார பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

