/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதையும் கவனியுங்க சார் : கோழிகளுக்கு தடுப்பூசி பணி நிறுத்தம்
/
இதையும் கவனியுங்க சார் : கோழிகளுக்கு தடுப்பூசி பணி நிறுத்தம்
இதையும் கவனியுங்க சார் : கோழிகளுக்கு தடுப்பூசி பணி நிறுத்தம்
இதையும் கவனியுங்க சார் : கோழிகளுக்கு தடுப்பூசி பணி நிறுத்தம்
ADDED : மார் 03, 2024 06:33 AM

மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு கூடுதலாக உள்ளது. இதேபோல் நாட்டுக்கோழி வளர்ப்பும் விவசாயிகளிடையே முக்கிய தொழிலாக உள்ளது. ஒன்றிய வாரியாக உள்ள கால்நடை கிளை நிலையங்கள் மூலம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று தடுப்பூசி போடுவது வழக்கம். அவ்வாறு தடுப்பூசி போட்டால் மட்டுமே வெயில் காலங்களில் கோழிகளை நோயிலிருந்து பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் வெயில் தாங்காமல் இறக்கும் நிலை ஏற்படும் . 100 மில்லி கொண்ட மருந்து பாட்டில் மூலம் 100 கோழிகளுக்கு தடுப்பூசி போடலாம்.
ஆனால் தற்போது சமீப காலமாக தடுப்பூசி போடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கால்நடைத்துறை மூலம் போடப்படும் கோழிகளுக்கான தடுப்பூசிகளை தடையின்றி செலுத்தி விவசாயிகளையும், கோழி வளர்போரையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பொங்கலுக்கு ஒரு கிலோ ரூ.450 வரை விற்ற நாட்டுக்கோழி, தற்போது ஒரு கிலோ ரூ.700 வரை விற்கிறது .கோழிக்கறி விலை உயர்ந்துள்ள நிலையில் வெயிலால் தடுப்பூசி இன்றி நோய் பாதிப்பால் கோழிகளை பராமரிக்க முடியாமல் பாதிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

