/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதையும் கவனியுங்க: 'கொடை'யில் பராமரிப்பற்ற தொல்லியல் சின்னங்கள்: பாதுகாப்பில் நடவடிக்கை இல்லாததால் பாழாகின்றன

ADDED : நவ 04, 2025 04:28 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தொல்லியல் சின்னங்கள்   பராமரிப்பின்றி,   பாதுகாப்பு  நடவடிக்கையும்  இல்லாததால் பாழாகின்றன .
மாவட்டத்தை பொறுத்தமட்டில் கொடைக்கானல், தாண்டிக்குடி, பன்றிமலை, ஆடலுார், பாச்சலுார், பேத்துப்பாறை, அடுக்கம், மன்னவனுார்,கே சி பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, சிறுமலை, கன்னிவாடி,வடமதுரை,குஜிலியம்பாறை, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் உள்ளன.   தொன்மை வாய்ந்த தொல்லியல் சின்னங்களை ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தி உள்ளனர்.இவை அடையாளப்படுத்திய கையோடு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்பு பதாகை மட்டுமே ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது. அவற்றின் பழமையை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது  தொல்லியல் சின்னங்கள் சிதலமடைந்து வருகிறது.   ஆதி மனிதர்கள் வாழ்ந்த எச்சங்கள், பாறை ஓவியங்கள், முதுமக்கள் தாழி, கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள்,கற்திட்டுகள்,வணிகம் சார்ந்த கல்வெட்டுகள், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் ஏராளம்  உள்ளன. இவற்றை தொல்லியல் துறையினர் பராமரிக்காமல்   பாழாகி  வருகின்றன. இவற்றை பாதுகாப்பதோடு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் தொல்லியல் சின்னங்கள் அடங்கிய சுற்றுலாவை அறிமுகப்படுத்த வேண்டும்.
...............
இளைய தலைமுறையினர் அறிய வாய்ப்பு
கொடைக்கானல், தாண்டிக்குடி உள்ளிட்ட மலைப்பகுதியில் தொல்லியல் சின்னங்கள் ஏராளம் உள்ளன. பழங்கால மனிதர்களின் அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை பராமரிக்க  தொல்லியல் துறையினர்    நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவ்வகையான சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் பழங்கால மனிதர்களின் வாழ்வியல் முறைகளை தற்போதுள்ள இளைய தலைமுறையினர் அறிய வாய்ப்பு ஏற்படும்.
பாலசுப்ரமணி, இயற்கை ஆர்வலர், கொடைக்கானல் .