/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பத்திர அலுவலகத்திற்கு வராத சார்பதிவாளர் மக்கள் முற்றுகைக்கு தயாராக மாற்று ஏற்பாடு

ADDED : பிப் 15, 2024 06:07 AM
வடமதுரை: வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சார்பதிவாளர் வராத நிலையில் மக்கள் முற்றுகை போராட்டத்திற்கு தயாராக மாற்று ஏற்பாடு செய்ய பத்திரபதிவு தொடங்கியது .
புதிதாக நிலம் வாங்குபவர்கள் புதன்கிழமைகளில் பதிவு செய்வதை விரும்புகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று பத்திரப்பதிவுக்கு ஏராளமானோர் காத்திருந்த நிலையில் சார்பதிவாளர் விடுமுறை எடுத்ததால் மாற்று அதிகாரி மதியம் 3:00 மணிக்கே அலுவலகத்திற்கு வந்தார். அதுவரை பத்திரப்பதிவிற்காக வந்திருந்த மக்கள் அலுவலகம் முன்பாக அமர்ந்திருந்தனர். இது போல் நேற்றும் மதியம் வரை சார்பதிவாளர் வரவில்லை. மக்கள் விசாரித்ததில் அலுவல் பணியாக மதுரை சென்றுள்ளார். வந்ததும் பணி துவங்கும் என்றனர்.இதனிடையே காத்திருந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்திற்கு தயாரானதும் மாற்று அதிகாரி மூலம் பதிவு பணி துவங்கியது.