/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கன்னிவாடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
கன்னிவாடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜன 20, 2024 05:15 AM

கன்னிவாடி: கன்னிவாடி ஆர்.சி., தொடக்கப்பள்ளி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
கன்னிவாடியில் 1913 ல் ஆர்.சி., தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
விரைவில் பள்ளிக்கு வருகை தந்த முன்னாள் மாணவர்கள் சார்பாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.பிரபாகரன் மணி அடித்து வகுப்பை துவக்கி வைத்தார்.
தாமதமாக வந்த முன்னாள் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் அருளானந்தம் அன்பு பிரம்படி கொடுத்தார். மாணவர்கள் தேர்ந்தெடுத்த எண்களின் அடிப்படையில் வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டு ஆசிரியர்கள் பாடல், கவிதை, கதை பேசி மகிழ்ந்தனர். ஆசிரியர்களுக்காக கடிதம் எழுதிய முன்னாள் மாணவர்கள், தபால் பெட்டியில் சமர்ப்பித்தனர்.ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பலுான் உடைத்தல், கேள்வி பதில், பந்து தள்ளிவிடும் போட்டிகள் நடத்தப்பட்டது.பாதிரியார் பிரவீன் சோர்லிஸ், பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.டி.ராஜசேகர் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.