ADDED : பிப் 19, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் 1985---19-88 வரை, இளங்கலை கூட்டுறவியல் ஊரக தொழில் மேலாண்மை,வளர்ச்சி நிர்வாக பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து வங்கி அதிகாரிகள், ஆசிரியர், கல்லூரி பேராசிரியர்கள், தனியார் துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் என, முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். மறைந்த பேராசிரியர்கள், நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பழைய கட்டடம்,மாணவ பருவத்தில் வைக்கப்பட்ட மரங்களின் அருகில் சென்று அப்போதைய சம்பவங்களை விவரித்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி பரிமாறினர். குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

