ADDED : ஆக 25, 2025 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி : - மதுரை சோழவந்தான் திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் 1992- -95 ல் இளங்கலைப் பயின்ற நுாற்றுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தாண்டிக்குடி தனியார் விடுதியில் சந்தித்தனர்.
தங்களது வாழ்க்கையை அனுபவங்கள் குறித்த குறும்படங்களை வெளியிட்டனர். இணையதளம் மூலம் தங்களது குடும்பங்களை ஒன்றிணைத்து அடுத்த தலைமுறைக்கு குழந்தைகளை எடுத்துச் செல்லும் அனுபவங்கள் குறித்து விளக்கினர். அரசு, பல்வேறு துறைகளில் பணியாற்றும் இவர்கள் ஒன்றிணைந்து சமூக சேவை, ஒருவருக்கொருவர் உதவி செய்வது,கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.