ADDED : ஆக 16, 2026 08:00 PM
நத்தம்: நத்தம் வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 53 ஆண்டுகளுக்குப் பின் ஆசிரியரிடம் ஆசி பெற்று, பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இப்பள்ளியில் 1974-– 1995 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 53 ஆண்டுகளுக்குப் பின் வேம்பார்பட்டி அரசு திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் மாணவரும் தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியருமான தனராஜன் தலைமை வகித்தார். இதில் சிலர் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விவசாயியாகவும், வியாபாரிகளாகவும் உள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் 60க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். முன்னாள் மாணவர் பிரதாப் சிங் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாணவரும் தி.மு.க., மாவட்ட பொருளாளருமான விஜயன் கலந்து கொண்டார். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னாள் வயதான ஆசிரியரிடம் மாணவர்கள் ஆசி பெற்றனர். பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர். பள்ளி நலன், வளர்ச்சியில் முன்னாள் மாணவர்கள் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர்களை மாணவர்கள் கவுரவித்தனர்.
