ADDED : ஆக 16, 2026 08:00 PM
சின்னாளபட்டி: சின்னாளபட்டி பைபாஸ் ரோட்டில், புதிதாக ஏ.ஆர்.எம்., கிராண்ட் பேலஸ் அண்டு சூட்ஸ் ஏ.சி., திருமண மண்டப திறப்பு விழா நடந்தது. உரிமையாளர்கள் முருகேசன், அட்சயா, ராமச்சந்திரன், முத்துலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
மண்டப சிறப்பம்சங்கள் குறித்து உரிமையாளர்கள் கூறுகையில், ‘சின்னாளபட்டியில் இருந்து மதுரை பைபாஸ் ரோட்டில், போக்குவரத்து வசதி கொண்ட அமைதியான சூழலில் 2 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கார் பார்க்கிங், ஜெனரேட்டர், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மண்டபம், உணவருந்தும் இடம், மணமகன், மணமகள் பிரத்யேக அறைகள் உட்பட அனைத்து பகுதிகளும் ஏ.சி., வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர 2வது தளத்தில் டீலக்ஸ் ஏ.சி., அறைகளும் வாடகைக்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு முதல் நிகழ்வாக எங்கள் குழந்தை மகாஸ்ரீயின் காதணி விழா மனநிறைவுடன் நடத்தப்பட்டது.’, என்றனர். உறவினர்கள் காங்கேயம் கன்றுடன் கூடிய பசு, ஆடு, வீட்டு உபயோக சாதனங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, வாழ்த்திச் சென்றனர்.
-
