தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : செப் 28, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பட்டிவீரன்பட்டி, செப்.29-

பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1976 – -77ம் ஆண்டில் 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து பொன்விழா ஆண்டாக கொண்டாடினர். முன்னாள் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

பள்ளி பருவத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், தங்களது வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள், ஓய்வு வாழ்க்கையை பற்றி பகிர்ந்துக் கொண்டனர். பள்ளிக்கு புதிய உடற்பயிற்சி கூடம் அமைத்து தந்தனர். கடந்த கல்வியாண்டில் 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வகுப்பறையில் முன்னாள் மாணவர்கள் அமர ஆசிரியர்கள் பாடம் எடுத்த சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது. ஏற்பாடுகளை ஜெயக்குமார், மோகன்குமார், முருகேசன், ராமமூர்த்தி, பெருமாள், பிரபாகரன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us