தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ புடலங்காய் விலை உயர்வு

புடலங்காய் விலை உயர்வு

புடலங்காய் விலை உயர்வு


ADDED : செப் 28, 2026 05:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம், செப்.29-

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் புடலங்காய் விலை இரு மடங்கு அதிகரித்து கிலோ ரூ.24க்கு விற்பனை ஆனது.

ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை சுற்றியுள்ள பகுதிகளில் புடலங்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன்பு பல இடங்களில் அறுவடை மும்முரமாக இருந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகமாக இருந்தது. இதனால் புடலங்காய் கிலோ ரூ.12க்கு விற்பனையானது.

சில நாட்களாக அறுவடை குறைந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து பாதியாக குறைந்து விலை இரு மடங்கு அதிகரித்து புடலங்காய் கிலோ ரூ.24 க்கு விற்பனை ஆனது. வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘இனி வரும் நாட்களில் புடலங்காய் வரத்து இன்னும் குறைய வாய்ப்புள்ளதால் விலை மேலும் அதிகரிக்கும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us