ADDED : மே 27, 2025 01:25 AM

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக மக்களின் நலன் வேண்டி வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்தியங்கிரா தேவி யாக பூஜையை சபை நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.
இதையொட்டி பிரத்யங்கரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்க யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மூடை மூடையாக கொட்ட வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், கோவை, திருப்பூர், உடுமலைப்பேட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர். கோயிலில் உள்ள கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் 100க்கு மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்கப்பட்டு அமாவாசை கோபூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
