ADDED : ஜூன் 26, 2025 01:41 AM
திண்டுக்கல்: அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிேஷம், வழிபாடுகள் நடந்தன.
திண்டுக்கல் மலையடிவார பத்திரகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், யாகம் நடந்தது.
அபிராமி அம்மன் கோயில், கோட்டைமாரியம்மன் உள்பட முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.திண்டுக்கல் என். ஜி. ஓ .,காலனி முனீஸ்வரன் கோயிலிலும் அமாவாசை யாக பூஜை நடந்தது.
நீர்நிலைகளில் முன்னோர்களை நினைத்து வழிபாடும் நடந்தது. கோபால சமுத்திர குளத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏராளமான மக்கள் வாழைக்காய், பச்சரிசியுடன் படையல் படைத்து முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர். இதில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டனர்.
சின்னாளபட்டி : சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. உற்ஸவர் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் அடிவாரம், மலை குகை கோயிலில் மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.