ADDED : ஜூன் 26, 2025 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், ஜூன் 26 -அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிேஷம், வழிபாடுகள் நடந்தன.திண்டுக்கல் மலையடிவார பத்திரகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், யாகம் நடந்தது.
அபிராமி அம்மன் கோயில், கோட்டைமாரியம்மன் உள்பட முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.திண்டுக்கல் என். ஜி. ஓ .,காலனி முனீஸ்வரன் கோயிலிலும் அமாவாசை யாக பூஜை நடந்தது. நீர்நிலைகளில் முன்னோர்களை நினைத்து வழிபாடும் நடந்தது. கோபால சமுத்திர குளத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏராளமான மக்கள் வாழைக்காய், பச்சரிசியுடன் படையல் படைத்து முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர் .