/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சமூகவிரோத செயல்களுக்கு துணை போகும் அம்மா பூங்கா
/
சமூகவிரோத செயல்களுக்கு துணை போகும் அம்மா பூங்கா
ADDED : அக் 28, 2025 04:08 AM

வேடசந்துார்: வேடசந்துாரில் ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் சிதிலமடைந்து பயன்பாடற்ற நிலையில் கிடப்பதால் சமூக விரோத செயல்களுக்கு துணை போகும் நிலையில் இதை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
வேடசந்துார் நகர் பகுதியில் இருந்து தினம் நுாற்றுக்கணக்கானோர் காலை, மாலை நேரங்களில் வடமதுரை ரோட்டில் நடை பயிற்சி செல்வது வழக்கம்.
இப்பகுதி மக்களின் நலன் கருதி அ.தி.மு.க., ஆட்சியில் நகர் பகுதியை யொட்டி உள்ள தட்டாரப் பட்டி ஊராட்சி பகுதியில் 2016 -17 ல் ரூ.25 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
எழில் மிகு தோற்றத்துடன் விளங்கிய இந்த பூங்காவில் நடைபயிற்சிக்கான வழித்தடம், சிறுவர்களுக்கான சறுக்கு, நான்கு ஊஞ்சல்கள், வாலிபர்களுக்கான பல்வேறு விதமான உடற்பயிற்சி கருவிகளுடன் செயல்பட்டன. இங்கு வரும் மக்களுக்கு தண்ணீர், கழிப்பறை, ஓய்வு எடுப்பதற்கான புல் தரை என பல்வேறு அம்சங்கள் அமைந்திருந்தன.
இவற்றை பராமரிப்பதற்கு தனி ஊழியர் நியமிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தால் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது.
வேடசந்துார் பகுதி மக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என கூடுதலானோர் பூங்காவிற்கு சென்று வந்தனர். அ.தி.மு.க., ஆட்சி முடிந்து தி.மு.க., ஆட்சி அமைந்த நிலையில் பராமரிப்பு குறைந்து நாளடைவில் பயன்பாடற்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது பூங்கா.
சிறுவர்களுக்கான சறுக்கை தவிர மற்ற அனைத்து உபகரணங்களும் சேதமடைந்து விட்டன.
பெரிய அளவிலான தனி அறையில் வைக்கப்பட்டிருந்த இளைஞர களுக்கான நவீன விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் தற்போது காணாமல் போய்விட்டன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் விளக்கு வசதி முறையான தண்ணீர் வசதி எதுவும் இல்லை.
நவீ ன மாக உருவாக்கப்பட்ட பூங்கா இன்று பயன்பாடற்ற நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக, ஒதுக்குப்புறமான ஓர் பகுதியாக மாறி உள்ளது .
ஆட் சி மாறி யதும் முடக்கம் ஏ.சந் திரசேகர், அ.தி.மு.க., இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர், வேடசந்துார் : அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.25 லட்சம் திட்ட மதிப்பில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
ஊழியர் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்த பூங்கா ஆட்சி மாறியதும் செயல்பாடு முடக்கப்பட்டு விட்டது.
தற்போது இந்த பூங்காவை கவனிப்பதற்கு ஆட்கள் இல்லை. அனைத்து உபகரணங்களும் சேதமடைந்து விட்டன. நவீன உடற்பயிற்சி கூடத்தில் கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. வேடசந்துார் ஒன்றிய நிர்வாகம் பூங்காவை பராமரித்து செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
முறை யாக பராமரியுங்க இல.ச க்திவேல், சமூக ஆர்வலர், வேடசந்துார்: வேடசந்துார் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வந்த பூங்கா இன்று திறந்தவெளி பாராக மாறி விட்டது.
பூ ங்கா செயல்பாடற்று போனதால் சமூக விரோத செயல்களுக்கு பாதுகாப்பான இடமாக மாறி விட்டது. பள்ளி கல்லுாரி மாணவர்களின் நடமாட்டமும் வருகையும் அதிகரித்துள்ள நிலையில் பெற்றோர், போலீசார் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசிய தேவையாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரித்து காலை 5:00 மணி -10:00 , மாலை 4:00 மணி - இரவு 8:00 மணி வரை இயங்கும் வகையில் முறைப்படுத்த வேண்டும். வேடசந்தூர் போலீசாரும் அடிக்கடி இப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும்.

