/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.ம.மு.க.,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
/
அ.ம.மு.க.,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஏப் 23, 2025 04:20 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அ.ம.மு.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தாடிகொம்பு ரோடு தனியார் மஹாலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி தலைமை வகித்தார். கட்சியின் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் பேசினார். இதை தொடர்ந்து தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம், பூத் கமிட்டி, கிளை, பேரூர், ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.
அடுத்தகட்டமாக தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். பொதுக்குழு உறுப்பினர் துரை கணேசன் ,மாவட்ட அவைத்தலைவர் செல்வகுமார், துணைச்செயலர் சுகுமாரன், இணைச்செயலர் பிரியதர்ஷினி, துணைச்செயலர் தமிழரசி, பொருளாளர் வீரக்குமார், மகளிர் அணி துணைத்தலைவர் வெள்ளைத்தாய், தகவல்தொழில்நுடப் துணை செயலர் சங்கர்மாதவன், எம்.ஜி.ஆர்., மன்ற துணைத்தலைவர் கோவிந்தன், இலக்கிய அணி செயலாளர் அண்ணாதுரை, பகுதி செயலர்கள் அன்சாரி உசேன், பாண்டி, அழகு, ஜெகநாதன் கலந்து கொண்டனர்.

