ADDED : மார் 05, 2024 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி என் எஸ்.வி.வி., மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி லக் ஷனாஸ்ரீ புதுச்சேரி ஆரோவில் சார்பில் தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கேற்றார்.
கேரளா, கர்நாடகா, கோல்கட்ட உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 2500க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். மூன்று மொழிகளில் நடந்த போட்டியில் பட்டிவீரன்பட்டி மாணவி லக் ஷனாஸ்ரீ கட்டுரை முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து ஆரோவில் நடந்த விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மாணவிக்கு சான்றிதழுடன், ரூ.75 ஆயிரத்தை வழங்கினார்.
மாணவியை பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் முரளி, பள்ளி தலைவர் கோபிநாத், செயலாளர் பிரசன்னா, முதல்வர் ஆத்தியப்பன் பாராட்டினர்.

