/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாசில்தார் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி
/
தாசில்தார் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி
ADDED : செப் 27, 2024 07:18 AM
நிலக்கோட்டை: சாலைபுதுாரை சேர்ந்த மணி மனைவி மாரியம்மாள் 48. இவரது உறவினரான உச்சப்பட்டியைச் சேர்ந்த ராஜகோபாலன் மனைவி பெளச்சி 45.இவர்கள் உறவினர்களுடன் 4 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை தாலுகா அலுவலக உள்ள தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலத்துறை பிரிவு) அலுவலகம் முன்பு அரசு வழங்கிய வீட்டுமனை பட்டாவை தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்வதற்கு நிலக்கோட்டை தனி தாசில்தார் அலுவலகத்தில் தடையில்லா சான்று கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இருந்த தாசில்தார் முறையாக விசாரணை செய்து சான்று வழங்குகிறேன் என கூறியதைத் தொடர்ந்து இருவரும் உறவினர்களுடன் கலைந்து சென்றனர். ஆனால் தடையில்லா சான்று நேற்று வரை வழங்கவில்லை. ஆத்திரமடைந்த 2 பேர்களும் நிலக்கோட்டை தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் பிரிவு) அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தனர். அப்போது திடீரென மாரியம்மாள் பையில் கேனிலிருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
அங்கிருந்த இளைஞர் மண்ணெண்ணெய் கேனையும், தீப்பெட்டியும் பிடுங்கி வீசினார். அப்போது ஒரு ஆண்டாக எங்களது மகன்கள் பெயரில் தான செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்வதற்காக தடையில்லா சான்று கேட்டு அலைந்து கொண்டிருக்கிறோம். எங்களைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்து அலைக்கழிப்பதால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முடிவெடுத்தோம் என்றனர்.
அதே நேரத்தில் நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் பாரதி மகள் பாரதி அம்மாள் வயது 22.இவரது தந்தை அரசு விடுதி காப்பாளராக , ஆசிரியராக பணியில் இருந்த போதே இறந்து போனார். சேர வேண்டிய நிதி உதவி, அரசு வேலை கிடைப்பதற்கான சான்றுகளை தனி தாசில்தார் காலதாமதம் செய்து வருகிறார் எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

