sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திறமைகளை வெளிப்படுத்த ஓர் வாய்ப்பு: உதிரிப்பூக்கள் ஒன்று சேர்ந்தார் போல் பூரிப்பு

/

திறமைகளை வெளிப்படுத்த ஓர் வாய்ப்பு: உதிரிப்பூக்கள் ஒன்று சேர்ந்தார் போல் பூரிப்பு

திறமைகளை வெளிப்படுத்த ஓர் வாய்ப்பு: உதிரிப்பூக்கள் ஒன்று சேர்ந்தார் போல் பூரிப்பு

திறமைகளை வெளிப்படுத்த ஓர் வாய்ப்பு: உதிரிப்பூக்கள் ஒன்று சேர்ந்தார் போல் பூரிப்பு


ADDED : ஜன 28, 2024 06:02 AM

Google News

ADDED : ஜன 28, 2024 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்

ஆண்டு விழாக்கள் என்பது ஒரு நல்ல நினைவுகளை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதை பள்ளி,கல்லுாரிகள் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். ஆண்டு விழா என்றாலே ஆட்டம்,பாட்டம் தான் என மாணவர்கள் மனதில் மகிழ்ச்சி கூத்தாட தொடங்கிவிடும். இதுபோன்ற ஆண்டு விழா தான் பழநி அக் ஷயா பப்ளிக் பள்ளியில் நடந்தது. இதில் மாணவர்கள் நடனம்,நாடகம்,விளையாட்டு போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனித்திறமைகளை வெளிக்காட்டி உள்ளனர். இதில் பங்கேற்றோர் மனம் திறந்ததாவது.

எங்களுக்கு பெருமிதமே


புருஷோத்தமன், பள்ளி தலைவர்: பார் போற்றும் பழநியில் ஊர்போற்ற தம் குழந்தைகளை மாற்ற வேண்டி இங்கு அலையெனத் திரண்டு வந்து தம் குழந்தைகளைப் பாராட்ட காத்திருக்கும் பெற்றோர்களும், வானில் வலம் வரும் வண்ணத்துப்பூச்சிகள் போல பளிச்சிடும் மாணவ மாணவர்களும், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் இவ்விழாவில் எல்லா நிகழ்ச்சிகளும் எம் உள்ளம் கவர்ந்தவையே. பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் எண்ணுவது போல் எல்லாத்துறைகளிலும் மாணவர்களை சிறப்படையச் செய்வதையே நோக்கமாக கொண்டு இன்றும் என்றும் என்றென்றும் வழிகாட்டுவோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

ஆசிரியர்களை பாராட்டுகிறேன்


மங்கையர்கரசி,முதல்வர்: ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய் என்பதற்கேற்ப தன் குழந்தைகளின் படிப்போடு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களின் ஆவலைக் கருத்தில் கொண்டு ,மாணவர்களின் தனித்தன்மைகளை வளர்த்து எல்லா மாணவர்களும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கச் செய்கிறோம். வழிகாட்டும் ஆசிரியர்களின் முயற்சியும் பாராட்டுக்குறியது.

மகிழ்ச்சியான விழா


செல்வி நடராஜ்,ஆசிரியர்: கருமமே கண்ணாகக் கொண்டு எம்மை முழுவதும் மாணவர்களோடு இணைந்து அவர்களைக் கொண்டாடி மகிழ்வதில் பெருமையே தொடுவானம் என்பது தொலைதுாரம் இல்லை. தொட்டுவிடும் துாரம்தான் என்பதை புரியவைத்து அவர்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்வதில் பெருமிதம் கொள்கிறோம் இவ்விழா மகிழ்ச்சியான விழாவாக நடந்தேறியது.

எல்லாருமே திறமை படைத்தவர்களே


விஜயலட்சுமி புகழ்,ஆசிரியர்: பெற்ற இமயம் போல் உயர்ந்து நிற்கும் பள்ளியில் பயிலும் மாணவர்களை எம் விழிகள் வழிநடத்திச் சென்று அவர்கள் திக்கெட்டும் பட்டொளி வீசிப் பாரில் வலம் வருவதைக் காணும் போது உதிரிப்பூக்கள் ஒன்று சேர்ந்து மணம் வீசுவதைப் போல் உள்ளம் பூரிக்கிறது. எல்லாருமே திறமை படைத்தவர்கள் தான். அதை வெளிக்கொண்டு வரும் வழியை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் தெய்வம்


பவேஸ் ஸ்வாமி, மாணவர்: கல்லாய் இருந்த என்னை சிலையாய் செதுக்கும் சிற்பியாகதான் நான் என் ஆசிரியர்களைப் பார்க்கிறேன். இத்தனை சிறப்புகளுடன் எம் பள்ளி பளிச்சிடும் போது அதில் நானும் ஓர் வண்ணம் என உணர்கிறேன். எனது கடமையைச் சரியாக செய்ய வழிகாட்டும் தெய்வங்களாக என் ஆசிரியர்களின் ஆசியை இன்றும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆர்வத்துக்கு முக்கியத்துவம்


சஷ்மிதா,மாணவி: பள்ளியின் மாணவியாகிய நான் இப்பள்ளியில் படிக்கம் வாய்ப்பினைக் தந்த என் பெற்றோர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் நன்றி . இதுபோன்ற விழாக்கள் மூலமாக மாணவர்கள் திறமை வெளி உலகத்திற்கு வருகிறது. இதைப்பார்த்து அவரவர் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு எதில் ஆர்வமோ அதை கொடுக்க வேண்டும்.

மெய் சிலிர்த்தது


கார்த்திகேயன், பெற்றோர், பழநி:எங்கள் கண்மணிகளின் களவுகளைக் காவியமாக்கும் ஒலியல் கூடமாக நாங்கள் இந்தப் பள்ளியைப் பார்க்கிறோம். ஒவ்வொரு மாணவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் போதும் மெய் சிலிர்த்தது. வண்ணத்துப் பூச்சிகளின் அணிவகுப்பைப் போல் வலம் வரும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்,ஆசிரியர்களின் ஈடுபாடும் எம்மைக் கவர்ந்தது.

என்னை மாற்றியது பள்ளி தான்


தர்ஷினி,முன்னாள் மாணவி: என்னை இப்பள்ளியின் முன்னாள் மாணவி என்று சொல்லிக் கொள்வதில் பெருமையே. என் வளர்ச்சியைத் திரும்பிப் பார்க்கும் போது அதில் மிகப்பெரும் பங்கு வகுப்பதும் என்னை இந்த அளவிற்கு உயர்த்தி எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்ப்பது போல் என்னை மாற்றியதும் என் பள்ளியே. ஊக்குவித்து உயர்த்திய நிறுவாகத்தினர்,ஆசிரியர்களுக்கு நன்றிகள்.






      Dinamalar
      Follow us