sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பராமரிப்பின்றி பயணிகளை தவிக்கவிடும் நிழற்குடை

/

பராமரிப்பின்றி பயணிகளை தவிக்கவிடும் நிழற்குடை

பராமரிப்பின்றி பயணிகளை தவிக்கவிடும் நிழற்குடை

பராமரிப்பின்றி பயணிகளை தவிக்கவிடும் நிழற்குடை


ADDED : அக் 09, 2024 05:57 AM

Google News

ADDED : அக் 09, 2024 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பராமரிப்பு இல்லா பூங்கா : திண்டுக்கல் மாநகராட்சி தனலட்சுமி நகர் பூங்கா பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகிறது . இதோடு விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்து துருப்பிடித்து வீணாகிறது. இதை கருதி பூங்காவை பராமரிக்க நடவடிக்கை வேண்டும்.

--முத்துக்குமார், திண்டுக்கல்.

எரியாத தெரு விளக்குகள் : திண்டுக்கல் காந்திஜி நகர் ரோட்டில் தெரு விளக்குகள் இரவு நேரங்களில் எரியாததால் பொதுமக்கள் இருட்டில் தவிக்கின்றனர். திருட்டு சம்பவங்கள அதிகம் நடப்பதால் விளக்குகளை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சின்னதம்பி, திண்டுக்கல்.

மருத்துவமனை வளாகத்தில் செடிகள் : நத்தம் அரசு மருத்துவமனை வளாகப் பகுதியில் செடிகள் வளர்ந்து விஷ ஜந்துக்களின் கூடாரமாக உள்ளது. மேலும் செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் கால்நடை வளர்ப்போர் மருத்துவமனை வளாகத்திற்குள் மாடுகளை மேய்த்து வருகின்றனர்.

-பாண்டி, நத்தம்.

பயனற்ற நிழற்குடை : கொடைக்கானல் பூம்பாறை கைகாட்டி பகுதியில் உள்ள நிழற்குடை பராமரிப்பின்றி பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் முகம் சுளிக்கும் நிலையில் உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் நிலையில் இதைசீர் செய்ய வேண்டும்.

-முருகன், பூம்பாறை.

சேதமான மெயின் ரோடு : குஜிலியம்பாறை ஒன்றியம் திருக்கூர்ணம் செல்லும் மெயின் ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமம் ஏற்படுவதால் விவசாயிகள் பாதிக்கின்றனர். ரோட்டை புதுப்பிக்க நிர்வாகம் முன் வர வேண்டும். -

--ஜி.ஆர்.ராஜகோபால், திருக்கூர்ணம்.

சாக்கடையில் அடைப்பு : திண்டுக்கல் அருகே குடைப்பாறைபட்டியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் ரோட்டில் சாக்கடையில் குப்பை அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது . சாக்கடையை துார்வாரி குப்பையை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

-கண்ணன், பள்ளப்பட்டி.

குப்பை மூடைகளால் ஆபத்து : ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் தங்கச்சி அம்மாபட்டி அருகே நங்காஞ்சி ஆற்றுப்பாலத்தில் குப்பை மூடைகளை போட்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, ஒட்டன்சத்திரம்.






      Dinamalar
      Follow us