/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆத்துார் நீர்த்தேக்கத்தில் அன்புமணி
/
ஆத்துார் நீர்த்தேக்கத்தில் அன்புமணி
ADDED : செப் 28, 2025 03:17 AM
ஆத்தூர்: திண்டுக்கல் வந்த பா.ம.க., தலைவர் அன்புமணி ஆத்துார் நீர்த்தேக்க பகுதியில் ராஜவாய்க்கால் தடுப்பணையை பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: காமராஜர் நீர்த்தேக்க ராஜாவாய்க்கால் மீது முறைகேடாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. சில மாதங்கள் தான் தி.மு.க., அரசு .அதன் வரப் போவதில்லை. இனி நமது ஆட்சி தான். திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 12,000 ஏக்கர் நிலங்கள் குடகனாற்று நீரை பாசனத்திற்காக நம்பியுள்ளன. ராஜா வாய்க்கால் மீது அனுமதியின்றி தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் குடிநீருக்காக கஷ்டப்படுகின்றனர். இங்குள்ள அமைச்சருக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். இதன் நடவடிக்கையில் தாமதம் ஏற்படும் சூழலில் நானே நேரடியாக களத்தில் இறங்கி போராடும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.
நடைபயணம் திண்டுக்கல்: பா.ம.க., தலைவர் அன்புமணி உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற பெயரில் சட்டசபை தொகுதி வாரியாக நடை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச்சில் கிறிஸ்தவ வன்னியர் மக்களின் எம்.பி.சி., கோரிக்கை குறித்து பாதிரியார்கள், பொதுமக்கள், சமூக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மாலையில் மேட்டுராஜக்காப்பட்டி முருகன் கோயிலிருந்து நடைபயணத்தை தொடங்கி போஸ்ட் ஆபீஸ், பஸ் ஸ்டாண்ட், பூ மார்கெட் ரோடு வழியாக மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி, மாநில துணைப்பொதுச்செயலர் வடிவேல் ராவணன், மாவட்ட செயலர்கள் ஜான்கென்னடி, சிவக்குமார், வைரமுத்து, மாவட்ட தலைவர்கள் திருப்பதி, மணி கலந்து கொண்டனர்.
ஒன்றிணைய கோஷம்
திண்டுக்கல்லில் இருந்து நீர்த்தேக்கம் செல்லும் வழியில் வக்கம்பட்டி, கோழிப்பண்ணை, ஆத்துார் உள்ளிட்ட இடங்களில் பா.ம.க.,வினர் வரவேற்பு அளித்தனர். நீர்த்தேக்க பகுதி அருகே சிலர் 'ஒன்றிணைய வேண்டும், ஒன்றிணைய வேண்டும் ஐயா ராமதாசுடன் ஒன்றிணைய வேண்டும், ராமதாசும் அன்புமணியும் ஒன்றிணைந்து 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என கோஷமிட்டனர்.