/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அங்கன்வாடி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 05, 2025 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர் ,உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் போது ரூ.10 லட்சம் பணிக்கொடை வழங்கவேண்டும்.
ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ,தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் ஒஜ்றிய அலுவலகம் முன்பு நடந்த இதற்கு மாவட்ட தலைவர் செல்வதன பாக்கியம் தலைமை வகித்தார். செயலாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார்.
சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் சந்திரபோஸ், அரசு ஊழியர் சங்க செயலாளர் சுகந்தி பங்கேற்றனர்.
மாவட்ட பொருளாளர் தமிழ்செல்வி நன்றி கூறினார்

