ADDED : செப் 11, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சி சோழகுளத்துப்பட்டியில் எம் .பி., மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் திறந்து வைத்தார்.
தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன் முன்னிலை வகித்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ், ஜான் பீட்டர், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, சாணார்பட்டி தெற்கு ஒன்றிய ம.தி.மு.க., செயலாளர் பாலகுரு, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் குழந்தைவேல், மாவட்டக்குழு உறுப்பினர் பாப்பாத்தி, முஸ்லிம் லீக் தொகுதி செயலாளர் பதுருதீன் அஸரத் , வி.சி.க., ஒன்றிய செயலாளர் நல்லுச்சாமி கலந்து கொண்டனர்.