தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்; 750 பேர் கைது

 அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்; 750 பேர் கைது

 அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்; 750 பேர் கைது


ADDED : ஜன 21, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 750 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று(ஜன.20) முதல் பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கி உள்ளனர்.

இதன் தொடக்கமாக திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தரி முன்னிலை வகித்தார், பொருளாளர் முருகவள்ளி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி, மாவட்ட செயலாளர் சுகந்தி, மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் முருகானந்தம், சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் மணிக்காளை பேசினர். இதன் பின் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., சிலை வரை ஊர்வலமாக சென்று மறியல் செய்தனர். பெண்கள் 720, ஆண்கள் 30 என 750 பேரை திண்டுக்கல் நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us