/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிப்பறை கட்டணக் கொள்ளை; பயணிகள் பாதிப்பு
/
கழிப்பறை கட்டணக் கொள்ளை; பயணிகள் பாதிப்பு
ADDED : ஜன 21, 2026 06:06 AM

கொடைக்கானல்: - கொடைக்கானல் நகராட்சி சமுதாய கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் பாதித்துள்ளனர்.
கொடைக்கானல் பஸ்ஸ்டாண்ட், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, நாயுடுபுரம், பசுமை பள்ளத்தாக்கில் செயல்படும் நகராட்சி கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்க ரூ.2, மலம் கழிக்க ரூ. 3 கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
இதை கழிப்பறை நுழைவாயிலில் அறிவிப்பு பலகையில் இடம் பெறாமல் வெறுமனே விடப்பட்டுள்ளது.
ஏலம் எடுத்தவர்கள் இயற்கை உபாதை இரண்டிற்கும் தலா ரூ. 10 வசூலிக்கும் நடைமுறையை கையாண்டு இதற்கான ரசீது வழங்குவதில்லை. இவ்வாறான கட்டணக் கொள்ளை குறித்து புகார் தெரிவித்தும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வில்லை. தொடரும் கட்டணக் கொள்ளையால் முகம் சுளிக்கும் பொதுமக்கள் திறந்தவெளியை பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கழிப்பறைகளும் முறையாக பராமரிக்காமல் துர்நாற்றத்திற்கிடையே செயல்படுகிறது.
நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' சுகாதார வளாகங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இதற்கு ரசீது வழங்க வேண்டும். கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்''என்றார்.

