/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உதவியாளர்கள் இல்லாத அங்கன்வாடிகளில்... சிரமம் ; வாக்காளர் திருத்த பணிக்கு சென்றதால் அவதி
/
உதவியாளர்கள் இல்லாத அங்கன்வாடிகளில்... சிரமம் ; வாக்காளர் திருத்த பணிக்கு சென்றதால் அவதி
உதவியாளர்கள் இல்லாத அங்கன்வாடிகளில்... சிரமம் ; வாக்காளர் திருத்த பணிக்கு சென்றதால் அவதி
உதவியாளர்கள் இல்லாத அங்கன்வாடிகளில்... சிரமம் ; வாக்காளர் திருத்த பணிக்கு சென்றதால் அவதி
ADDED : நவ 09, 2025 05:35 AM

பட்டிவீரன்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெறும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். பல அங்கன்வாடிகளில் உதவியாளர்கள் இல்லாத நிலையில் இவர்களும் வாக்காளர் திருத்த பணியில் உள்ளதால் குழந்தைகள் பராமரிப்பில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி நவ. 4 முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் வரை இப்பணியில் நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்குள் வாக்காளர் திருத்த படிவங்களை ஒவ்வொரு வீடுகளிலும் கொடுத்து திரும்ப பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பயிற்சியும் நடத்தப்பட்டது. நவ. 4ல் துவங்கிய படிவம் வழங்கும் பணியில் அங்கன்வாடி ,பிறதுறை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் மாவட்டத்தில் உள்ள பல அங்கன்வாடிகளில் உதவியாளர் பணி காலியாக இருப்பதால் ஆசிரியர்கள் சமையல் வேலைகளையும் உதவியாளர் வேலைகளையும் பார்த்து வந்தனர்.
வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் அங்கன்வாடி ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதால் சமையலர்கள், உதவியாளர்கள் இல்லாத அங்கன்வாடிகளில் ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அங்கன்வாடிக்கு வருகின்ற குழந்தைகளை கவனிக்க முடிவதில்லை. சமையல் வேலையையும் செய்ய முடிவதில்லை. வாக்காளர் திருத்த பணியும் செய்ய வேண்டி உள்ளது. மூன்று வேலையும் ஒரு நபர் எப்படி செய்ய முடியும் என்ற புலம்பல் அதிகரித்து வருகிறது. கிராமங்களில் சமாளித்து விட்டாலும் நகர் பகுதிகளில் உதவியாளர்கள் இல்லாத அங்கன்வாடி ஆசிரியர்கள் படும் துயரம் அளவில்லாதது.
....
தன்னார்வலர்களை நியமிக்கலாமே
அங்கன்வாடியில் பணியாற்றுபவர்கள் குழந்தைகளையும் கவனிக்க வேண்டி இருப்பதால் உதவியாளர்கள், சமையலர்கள் இல்லாத நிலையில் இவர்களுக்கு பதில் தன்னார்வலர்களை வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு உடனடியாக நியமிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.
ரமேஷ், பட்டிவீரன்பட்டி
....

