/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி இடும்பன் கோயில் வளாகத்தில் கட்டண பார்க்கிங் அமைக்க திட்டம்
/
பழநி இடும்பன் கோயில் வளாகத்தில் கட்டண பார்க்கிங் அமைக்க திட்டம்
பழநி இடும்பன் கோயில் வளாகத்தில் கட்டண பார்க்கிங் அமைக்க திட்டம்
பழநி இடும்பன் கோயில் வளாகத்தில் கட்டண பார்க்கிங் அமைக்க திட்டம்
ADDED : நவ 09, 2025 05:36 AM
பழநி: பழநி சிவகிரிபட்டி பைபாஸ் பகுதியில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடும்பன் கோயில் வளாகத்தில் கட்டண பார்க்கிங் அமைக்க திட்டமிட்டு வருகின்றனர்.
பழநி சிவகிரிபட்டி பைபாஸ் பகுதியில் இடும்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு இடும்பன், விநாயகர், மகாலட்சுமி சிவன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இடும்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின் முருகனை தரிசனம் செய்வது வழக்கம். இங்கு கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
இடும்பன் கோயில் பழநி கோயிலின் நிர்வாகத்தின் கீழ் செயல்படுவதில்லை. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. வருவாய் குறைந்த கோயிலாகவும் உள்ளது.
இந்நிலையில் இக்கோயில் வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்ய கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கட்டண பார்க்கிங் வசதியை ஏற்படுத்த ஹிந்து சமய அறநிலைத்துறையிடம் கோயில் நிர்வாகம் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

