ADDED : மார் 01, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி நேற்று பூக்குழி திருவிழா நடந்தது.
இதைதொடர்ந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நத்தம் பெரிய விநாயகர் கோயில் திடலில் அன்னதானம் நடந்தது. வேம்பார்பட்டி அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அபுதாகீர் தொடங்கி வைத்தார். அன்னதான கமிட்டி தலைவர் ஏர்வாடி முகமது இஸ்மாயில் வரவேற்றார். முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம் கலந்து கொண்டார்.

