ADDED : டிச 16, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: காணப்பாடி அய்யப்பன் கோயிலில் 36ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அன்னதான பூஜை, குத்து விளக்கு பூஜை நடந்தது.
அன்னதான பூஜைக்காக 1500 கிலோ அரிசி, 100 கிலோ நிலக்கடலை பருப்பு, 150 கிலோ புளி, 300 லிட்டர் நல்லெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி புளியோதரை தயார் செய்யப்பட்டது.
பிரசாதம் பெற 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கோயில், பள்ளி வளாகம், வேல்வார்கோட்டை ரோடு பகுதியில் வரிசையாக அமர்ந்தனர்.
இவர்களுக்கு கோயில் நிர்வாகிகளும், இளைஞர்களும் இலை வழங்கி அன்னதான பூஜை முடிந்ததும் அனைவருக்கும் புளியோதரை வழங்கினர்.
பிரசாதம் அனைவருக்கும் சேர்ந்ததும் சரணம் அய்யப்பா கோஷத்துடன் பக்தர்கள் கலைந்தனர். ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் நடராஜன், சுப்பையா, விழா குழுவினர் செய்தனர்.

