ADDED : செப் 16, 2025 04:50 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள்விழாவில் தி.மு.க., அ.தி.மு.க., சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க.,சார்பில் அமைச்சர் பெரியசாமி தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏ., செந்தில்குமார், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன், மாநகர பொருளாளர் சரவணன், விவசாய அணி அமைப்பாளர் கண்ணன், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம் கலந்துகொண்டனர். ஒட்டன்சத்திரம்: கள்ளிமந்தையத்தில் அமைச்சர் சக்கரபாணி அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் தங்கம் கலந்து கொண்டனர். நகர தி.மு.க., சார்பில் பஸ்ஸ்டாண்ட் அருகே நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி மரியாதை செய்தார்.
மாவட்ட அவைத் தலைவர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி கலந்து கொண்டனர். வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் தர்மராஜ், மத்திய தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் எஸ். ஆர்.கே.பாலு, தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய சார்பில் ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் மரியாதை செய்தனர்.
வேடசந்துார்: ஆத்து மேட்டில் எம்.எல்.ஏ., காந்திராஜன் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்றனர்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், நிர்வாகிகள் கவிதா முருகன், மருதபிள்ளை, முருகவேல், சாகுல் ஹமீது, மாரிமுத்து, பொன்ராம், மணிமாறன், சுப்பிரமணி பங்கேற்றனர்.
வடமதுரை: நகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் நிருபாராணி முன்னிலை வகித்தார். அண்ணாதுரை படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
உறுதிமொழி எடுத்தனர். துணை செயலாளர் வீரமணி, அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் முரளிராஜன் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., அ.தி.மு.க., சார்பில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜமோகன் தலைமையில் அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், சேசு, வி.டி.ராஜன், முரளி, இக்பால், பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், வழக்கறிஞர் பிரிவு ஜெயபாலன், தொழிற்சங்கம் ஜெயராமன், மருத்துவர் அணி ராஜசேகர், ஓட்டுனர் அணி பிரபு ராம், கலைப்பிரிவு ரவிக்குமார் மரியாதை செலுத்தி னர்.
கோபால்பட்டி: அ.தி.மு.க., மாநில ஜெ பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் மரியாதை செலுத்தினார். ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சின்னு, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், இளைஞரணி இளம்வழுதி, வர்த்தக அணி ஹரிஹரன், ஒன்றிய ஜெ.பேரவை எம்.ராஜேந்திரன், இணைச்செயலாளர் விஜயன்,எம்.ஜி.ஆர்., மன்றம் சக்திவேல் கலந்து கொண்டனர்.
* கோபால்பட்டியில் தி.மு.க., , மாவட்ட பொருளாளர் க.விஜயன்,நத்தத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் , நகர செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன்,ரத்தினக்குமார், சேக் சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, வழக்கறிஞர் அணி சுந்தரமூர்த்தி, இளைஞர் அணி இப்ரில் ஆசித், சுற்றுச்சூழல் அணி ராஜகோபால், கோணப்பட்டி பாக்யராஜ் கலந்து கொண்டனர்.