நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரிய கடைவீதி கோசல விநாயகர் கோயில், அபரஞ்சி விநாயகர் கோயில், உத்திர விநாயகர் கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது.
யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
அடிவாரம் கிரிவீதி மகிஷாசுரமர்த்தினி கோயில், வனதுர்க்கை அம்மன் கோயில்களில் அபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. உட்சிகால பூஜையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.