ADDED : அக் 25, 2026 04:29 PM
அ நிறம் | அளவு
பழநி: பழநி கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.
பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாரியம்மன் கோயில் கிழக்கு ரத வீதியில் உள்ளது. இக்கோயிலின் மாசித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இன்று (அக்.,25) கோயில் வளாகத்தில் கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் பலர் பங்கேற்று, சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். அன்னதானம் நடந்தது.
