ADDED : நவ 18, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : - கொடைக்கானலில் மேலும் ஒரு காட்டு யானை பலியானது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியான பள்ளங்கி கோம்பை மூங்கில்காட்டில் வருவாய் நிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது.
புலிகள் காப்பக ரேஞ்சர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் பார்வையிட்டு கால்நடை டாக்டர்களால் உடலை பரிசோதனை செய்ததில் தண்ணீருக்காக நீரோடைக்கு சென்ற போது பள்ளதாக்கில் விழுந்து இறந்தது தெரியவந்தது. அங்கேயே அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வெங்கலவயல் பகுதி வருவாய் நிலத்தில் சில தினங்களுக்கு முன் ஆண் காட்டு யானை ஒன்று யானைகளுக்குள் நடந்த சண்டையில் இறந்தது குறிப்பிடத்தக்கது.