/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் மேலும் ஒருவருக்கு உன்னிக்காய்ச்சல்
/
திண்டுக்கல்லில் மேலும் ஒருவருக்கு உன்னிக்காய்ச்சல்
திண்டுக்கல்லில் மேலும் ஒருவருக்கு உன்னிக்காய்ச்சல்
திண்டுக்கல்லில் மேலும் ஒருவருக்கு உன்னிக்காய்ச்சல்
ADDED : டிச 21, 2024 02:12 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் உன்னிக்காய்ச்சலால் ஏற்கனவே இருவர் இறந்தநிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த பழனிசாமி61, உன்னிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டிச.10ல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதேபோல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஒருவரும் இறந்தார். இவர் இறந்தபிறகு வெளிவந்த பரிசோதனை முடிவில் உன்னிக்காய்ச்சல் தொற்று இருப்பது தெரிந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இருவரின் வீடு பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திண்டுக்கல் தோட்டனுாத்து பகுதியை சேர்ந்த சத்தியமேரி47, 3 நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உன்னிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக சந்தேகமடைந்த டாக்டர்கள் ரத்த மாதிரியை சோதனை செய்தனர். நேற்று முடிவுகள் வெளியானதில் உன்னிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது.
அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே இருவர் இறந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

