/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கனிமவள உதவி இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு
/
கனிமவள உதவி இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு
கனிமவள உதவி இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு
கனிமவள உதவி இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு
ADDED : அக் 25, 2025 01:23 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் கனிமவள உதவி இயக்குநராக பணியாற்றி வருபவர் செல்வசேகரன். இவர், 2015 முதல் 2022 வரை விருதுநகர் மாவட்டத்தில் கனிமவள உதவி இயக்குநராக பணியாற்றினார்.
அந்த காலகட்டத்தில் அவரது பெயரிலும், மனைவி முருகாம்பாள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.
இவரது குடும்பத்தினர் திருநெல்வேலியில் உள்ளனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே, ஏழுமலையான் நகரில் வாடகை வீட்டில் செல்வசேகரன் தனியாக வசிக்கிறார். அந்த வீட்டில் நேற்று சோதனை நடந்தது.
காலை 6:30 மணி முதல் 9:30 வரை மூன்று மணி நேரம் நடந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. செல்வசேகரனின் திருநெல்வேலி வீடு உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

