/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ஊழல் தடுப்பு ஊர்வலம்
/
திண்டுக்கல்லில் ஊழல் தடுப்பு ஊர்வலம்
ADDED : அக் 30, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு திண்டுக்கல் ஊழல் தடுப்பு,கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சார்பில் திண்டுக்கல் நகரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
டி.எஸ்.பி.,நாகராஜன் தலைமை வகித்தார். டட்லி மேல்நிலைப்பள்ளி முன் துவங்கிய ஊர்வலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனை,வடக்கு போலீஸ் ஸ்டேஷன்,தலைமை தபால் நிலையம்,பூ மார்க்கெட்,பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும் டட்லி பள்ளியில் முடிந்தது. தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் ஊழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல் மின்வாரிய தலைமை அலுவலகத்திலும் ஊழல் தடுப்பு போலீசார் சார்பில் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

