/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஷேர் ஆட்டோ பறிமுதல் கலெக்டரிடம் முறையீடு
/
ஷேர் ஆட்டோ பறிமுதல் கலெக்டரிடம் முறையீடு
ADDED : ஜூலை 17, 2025 12:48 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வட்டார போக்குவரத்து துறையினர் அதிக அளவில் ஆட்களை ஏற்றி வந்ததாக 8 ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்து ரூ.1.15 லட்சம் பராதம் விதித்தனர்.
இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள 40 க்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.அவர்கள் கூறியதாவது :
மினி பஸ் உரிமையாளர்கள் கொடுத்த பொய் புகாரின் பேரில் உரிய ஆவணங்கள் இருந்தும் தங்களது வாகனங்களுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்துள்ளனர்.
ஷேர் ஆட்டோக்களால் குழந்தைகளை பள்ளிக்கு செல்வதற்கும், வயதானவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஏற்றிக்கொண்டு இறக்கி விடுவது போன்று பணிகளை செய்து வருகிறோம். திண்டுக்கல்லில் 500 குடும்பங்கள் இதனை நம்பி உள்ளது என்றனர்.