/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சமூக நல உறுப்பினருக்கு விண்ணப்பிக்கலாம்
/
சமூக நல உறுப்பினருக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 19, 2024 05:50 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 2015ல் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு,பாதுகாப்பு) சட்ட விதிமுறை படி இளைஞர் நீதி குழுமத்தில் 1 சமூக நல உறுப்பினர் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
குழந்தைகளுக்கான நலப்பணிகளில் 7 ஆண்டுகள் ஈடுபாடு கொண்டவர்,குழந்தை உளவியல் மனநல மருத்துவம், சமூகவியல்,சட்டம் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்படிவத்தை கலெக்டர் அலுவலகம் அருகில் எஸ்.பி.ஆர் நகர், 2வது குறுக்குத்தெருவில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இயக்குநர்,சமூகப்பாதுகாப்புத்துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600-010 என்ற முகவரிக்கு மார்ச் 4 ற்குள் அனுப்ப வேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை 80152-22327 என்ற எண்ணில் அணுகலாம்.

