/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயில் அறங்காவலர் குழு நியமனம்
/
பழநி முருகன் கோயில் அறங்காவலர் குழு நியமனம்
ADDED : ஜன 11, 2025 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அறங்காவலர் குழு உறுப்பினர்களாக சேலம் மாவட்டம் புது அழகாபுரத்தைச் சேர்ந்த தனசேகர், திருப்பூர் மாவட்டம் கே.பி.என்.,காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்த அன்னபூரணி, சின்ன கரட்டுப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், கதிரையன்குளம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி உள்ளிட்ட ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.