ADDED : ஏப் 10, 2025 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., இன்ஜினியரிங் கல்லுாரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் கார்த்திகை பாண்டியன் தலைமை வகித்தார்.
முன்னாள் மாணவர்கள் நிவாஸ் யாதவ்,சத்ய சீலன், சுபாஷினி, வர்ஷா,கார்த்திக், பாலாஜி,பூபாலன் கலந்து கொண்டனர். என்.பி.ஆர்.,இன்ஜினியரிங் கல்லுாரியை சேர்ந்த 296, கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த 211, பாலிடெக்னிக் கல்லுாரியைச் சேர்ந்த 43 பேர் என 550 மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான சம்பள விகிதங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கலை கல்லுாரி முதல்வர் தேவி,பாலிடெக்னிக் முதல்வர் ஆனந்த், நர்சிங் கல்லுாரி முதல்வர் அன்னலட்சுமி, வேலைவாய்ப்பு அதிகாரி லில்லியன் கலந்து கொண்டனர்.