ADDED : பிப் 01, 2026 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஸ்ரீவாசவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா, பள்ளி விளையாட்டு விழா, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான பாராட்டு விழா என, முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட கால்பந்து கழகத்தின் செயலாளர் சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாவட்ட அளவில் வெற்றி மாணவ, மாணவிகளை பாராட்டி, மாநில போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து பரிசுகள் வழங்கினார்.
பள்ளித் தாளாளர் ஸ்ரீதரன், பள்ளி முதல்வர் கோமகள் முன்னிலை வகித்தனர். டி.ஏ.வி.எஸ்., தலைவர் ராஜசேகரன், செயலாளர் கோபால், துணைத் தலைவர் ரவிக்குமார், செயற்குழு உறுப்பினர்கள், பள்ளியின் முதல்வர் வித்யா, ரோட்டரி கிளப் திண்டுக்கல் மேற்குச் செயலாளர் ரெங்கையா பங்கேற்றனர்.

