ADDED : டிச 17, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தெற்காசிய மாஸ்டர்ஸ் போட்டியில் 70 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ராமநாதன் கலந்துகொண்டு 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதற்கான பாராட்டுவிழா வி.ஜி.,ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில்நடந்தது. வள்ளிநாயகி அறக்கட்டளை தலைவர் ஆனந்த், வி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ஞானகுரு, மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சுபாஷினி தலைமை வகித்து ராமநாதனை பாராட்டியதோடு டி.வி.ராமசுப்பையர் விருது, சான்றிதழ் வழங்கினர்.
கால்பந்து சங்க செயலாளர் சண்முகம், தடகள சங்கத்தலைவர் ரத்தினம், கிக்பாக்சிங் சங்கத்தலைவர் மயில்வாகணன், மல்யுத்த சங்கத்தலைவர் சிவபாரதி, விளையாட்டு வீரர் சங்க தலைவர் சேசுராஜ் பங்கேற்றனர்.

