நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; எஸ்.எம்.பி., மாணிக்கநாடார் மெட்ரிக் மேல் நிலை பள்ளி 12ம் வகுப்பு மாணவன் ஜித்தன்அர்சுனன் ஜார்கன்டில் நடந்த 19 வயது தேசிய தடகளப்போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தையம், நீளம் தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார்.
அவரை தடகள சங்க தலைவர் துரைரத்தினம், செயலர் சிவகுமார், பொருளாளர் துரைராஜ், மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜாமைதீன், பள்ளி தாளாளர் பரமசிவம், ஹாக்கி சங்க நிறுவனர் ஞானகுரு, பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன், ஆசிரியை சித்ரா, பயிற்சியாளர் பாண்டிராஜ் வாழ்த்தினர். மாணவருக்க ஜன. 17 ம் தேதி தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் விருது வழங்கி பாராட்ட உள்ளனர்.