ADDED : டிச 30, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : 24வது தேசிய சப் ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் தர்ன் தரண் மாவட்டத்தில் டிச. 1 முதல் 6 வரை நடந்தது. இந்தியா முழுவதிலிருந்து 1,100 க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக அணியில் விளையாடிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் ரேஷ்மி குழு போட்டியில் ஒரு தங்க பதக்கமும்,ஸ்ரீ லதா நாண்குவான் பிரிவில் 3 வெண்கல பதக்கமும் வென்றார்.
இப் போட்டியில் தமிழ்நாடு அணியினர் 4 தங்கம், 5 வெள்ளி,10 வெண்கலம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையில் 2ம் இடம் பிடித்தனர். பதக்கம் வென்ற மாணவிகளும், அவருக்கு பயிற்சி அளித்த மாவட்ட வூசு சங்க செயலாளர் மாஸ்டர் ஜாக்கி சங்கரும் அமைச்சர் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

