/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
/
போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 25, 2024 07:28 AM

திண்டுக்கல்: அச்யுதா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தேசிய அளவில் 3ம் இடம். நீச்சல் போட்டியில் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மட்டைப்பந்து போட்டியில் தேசிய அளவில் முதலிடம், கால்பந்து போட்டிய , சதுரங்க போட்டியில் மாநில அளவில் தகுதி பெற்றனர். புல்வெளி டென்னிஸ் போட்டியில் மாநில அளவில் முதலிடம், எறிபந்து போட்டியில் மாநில போட்டிக்கு தகுதி ,தடகளப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றனர். சாதனை புரிந்த மாணவர்களை பள்ளி செயலாளர் மங்கள்ராம்,காயத்ரி மங்கள்ராம், முதன்மை முதல்வர் சந்திரசேகர்,துணை முதல்வர் குணசேகரன் பாராட்டி பரிசு வழங்கினர்.
ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, சர்மிளா பேகம்,அந்தோணிதாஸ், லில்லி, பாண்டீஸ்வரி. பிரியங்கா, ஹெர்பர்ட், மேலாளர் கார்த்திக், ராஜசேகரன் உடற்கல்வி ஆசிரியர்கள் பூமிநாதன்,வினோத் பங்கேற்றனர்.